Saturday, 29 September 2018

பரியேறும் பெருமாள்: ஒடுக்கப்பட்டோரின் அரசியல் சினிமா மொழியை நோக்கிய பாய்ச்சல்...



விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வையும் நிலத்தையும் 90கள் வரை பெரும்பாலும் நவீன இலக்கியமே பேசி வந்தது. தமிழ்சினிமாவின் பொதுவான கதைக்களன்கள் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மனிதர்களை மங்கலான உதிரிபாத்திரங்களாகவே சித்தரித்தன. வறுமை சில சமயம் உக்கிரமாக காட்டப்பட்டாலும் அது சாதிய முரண்பாடுகளை தவிர்த்த எதார்த்தமாக சித்தரிக்கப்பட்டது. அப்படியே விளிம்பு நிலை மனிதர்கள் காட்டப்பட்டாலும் அது அரிதாகவும், பலசமயங்களில் அவர்களை வில்லன்களாக அல்லது சமூகத்திற்கு எதிரானவர்களாக கட்டமைத்து ஆதிக்க சாதியினரை ஹீரோவாக கட்டமைக்கும் மனோபவம்தான் இருந்து வந்தது. தென் தமிழக கிராமங்கள்  என்பவை சாதிப்பெருமை பேசியும் வன்முறையை வீரமாக கொண்டாடும் இடமாகத்தான் வெளிப்படுத்தப்பட்டது.

‘பரியேறும் பெருமாள்’ படம் மூலமாக ஒடுக்கப்பட்டோரின் அரசியல் சினிமா மொழியை நோக்கிய ஒரு பாய்ச்சலை உணர முடிகிறது. ஒடுக்கப்பட்டோர் அரசியலை ஜனரஞ்சகமாக மொழியில் சமூக நீதியின் குரலாக முன் வைக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். சாதியின் இறுக்கம் சற்றே தளர்ந்துவிட்டதாக கூறப்படும் இந்த காலத்திலும்  ஒடுக்கப்பட்டவர்கள் யார் யாரால் எவ்வாறெல்லாம் நடத்தப்படுகிறார்கள் என்பதை பல்வேறு நுணுக்கமாக காட்சிகளால் பதிவு செய்கிறார். படம் முழுக்க, ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாட்டு அரசியலை கருப்பி உட்பட அனைத்து கதாபாத்திரங்களின் வழியே வெளிப்படுகிறது. சக மனிதனை மனிதனாக கூட மதிக்க மனமில்லாத மனிதர்களின் கோர முகங்களை அழுத்தமாக பதிவு செய்கிறது

No comments:

Post a Comment