Saturday, 17 November 2018

தனுஷ் ஏன் அடுத்த படத்தின் இயக்குநராக மாரிசெல்வராஜை தேர்ந்தெடுத்தார் ? தெரியுமா ?


தற்போது தமிழ் சினிமாவில் இறங்கி வெற்றிகரமாக ஓடிய திரைப்படங்களில் மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய படம் தான் "பரியேறும் பெருமாள்"
இந்த படத்தை இயக்குநர் மாரிசெல்வராஜ் அவர்கள் இயக்குநர் ராமின் துணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதல் திரைப்பட கனவை நோக்கி செல்லும் போது மாரி செல்வராஜ் நிறைய கஷ்டங்களை சந்தித்தார்.
நிறைய பேருக்கு இந்த கதையை கூறியிருக்கிறார்.ஆனால் யாரும் முன்வரவேஇல்லை. பின்னர் இவர் வேறு கதைக்களத்தை நடிகர் தனுஷிடம் கூறலாம் என்று நினைக்கும் போது அவரை நெருங்க கூட முடியவில்லை.
மாரி செல்வராஜ் அப்போது சாதாரண மனிதனாக தெரிந்தார்.பின்னர்
பா.இரஞ்சித் அவர்களின் நீலம் தயாரிப்பில் உருவாக தொடங்கியது
பரியேறும் பெருமாள்..இந்த படத்தின் கதாநாயகன் கதிர் தானாகவே முன்வந்து இந்த பாத்திரத்தை ஏற்று நடித்தார்.
இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் ஒரு நாளிதழ் பேட்டியில் அவர் மாரி செல்வராஜ் முதலில் தான் தனுஷிடம் தான் சென்றேன் அவரை நெருங்க கூட முடியவில்லை என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விஷயம் தனுஷின் காதுக்கு சென்றிருக்காமா என்று தெரியவில்லை.ஒருவேளை அதை கேள்விப்பட்டு தனுஷ் தன்னுடைய அடுத்த படத்தின் இயக்குநராக வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.சில நாள் முன்னர் தன்னுடைய அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டார் தனுஷ்.
எது எப்படியோ !  தரமான அடுத்த படைப்பு தயாராகிறது
இது போன்ற மேலும் பல தகவல்களுக்கு எங்களை டிவிட்டரில் தொடரவும் .

Twitter : @ARJUNStudiO14

No comments:

Post a Comment