மலையாளத்தில் பெரும் வெற்றிபெற்ற ‘கட்டப்பனையிலெ ரித்திக் ரோஷன்’ படத்தை தமிழில் தனுஷ் ரீ-மேக் செய்து தயாரிக்கிறார் என்றும் இந்த படத்தில் விஜய் டிவியின் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சிப் புகழ் தீனா கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்றும் தகவலை வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படத்திற்கு ‘அஜித் ஃப்ரம் அருப்புக்கோட்டை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனெவே தனுஷ் நடிப்பில் ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ என்ற ஒரு படம் வெளியாகியுள்ள நிலையில் அது மாதிரியே தனுஷ் தயாரிக்கும் படத்திற்கு ‘அஜித் ஃப்ரம் அருப்புக்கோட்டை’ என்று வித்தியாசமாக டைட்டில் சூட்டப்பட்டிருப்பது தனுஷ் ரசிகர்களை மட்டுமல்லாமல் அஜித் ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் என்பது நிச்சயம்! ஆனால் இந்த தலைப்பு குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் படக்குழுவினர் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#VijayTV #Dheena #AjithfromArupukottaiDhanush #WunderbarFilms
No comments:
Post a Comment